நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…கொரோனா தொற்றிலிருந்து வேகமாகக் குணமாகும் கடற்படையினர்..!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இதுவரையில் 756 கடற்படை வீரர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையில் இதுவரை 1,947 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதில் 1,421 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.இந்நிலையில் 515 பேர் தற்போதும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.அத்துடன் 61 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.