கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிறந்த அழகான ஆண் குழந்தை..!!

கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
கோவைப்புதூர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் சுந்தராபுரம் பகுதியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் இந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உள்ளதா? எனப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அதன் முடிவு கடந்த 9ஆம்திகதி வெளியானது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதைத்தொடர்ந்து, அவர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் உள்ள சிறப்பு விடுதியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வந்தனர்.இந்நிலையில் அந்த பெண்ணுக்கு நேற்று காலை பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தை ஓன்று பிறந்தது. அவருக்கு இது 2ஆவது பிரசவமாகும்.இதுகுறித்து இ.எஸ்.ஐ. மருத்துவமனை டீன் நிர்மலா கூறும்போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை அளித்ததன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.அந்தக் குழந்தைக்கு 3 நாட்கள் கழித்து கொரோனா பரிசோதனை செய்யப்படும். இஎஸ்ஐ மருத்துவமனையில் இன்று (நேற்று) ஒரே நாளில் திருநங்கை உட்பட 7 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.