யாழ் நகரில் நடந்த கோர விபத்து…இரு உயிர்களை மோதித் தள்ளிய ரயில்..!! பரிதாபமாகப் பலியான உயிர்..!!

யாழ்.புகையிரத நிலையத்திலிருந்து காங்கேசன்துறை சென்ற புகையிரதத்தில் மோதி உயிருக்கு போராடிய பசு மாடு மக்களால் மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

நாவலர் வீதி பகுதியில் நேற்றிரவு ரயில் பாதையில் நின்ற இரு பசு மாடுகள் மீது ரயில் மோதியது. இதன்போது ஒரு மாடு பரிதாபமாக பலியானதுடன், மற்றொரு மாடு காயமடைந்த நிலையில், நேற்றிரவு தொடக்கம் எழுந்து நடக்க முடியாத நிலையில் அங்கேயே கிடந்துள்ளது.காயமடைந்து நடக்க முடியாத நிலையில் கிடந்த மாட்டினை அப்பகுதி மக்கள் மற்றும் யாழ்.மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மற்றும் கால்நடை வைத்தியர்கள் இணைந்து மீட்டுள்ளதுடன் மாட்டிற்க்கு சிகிச்சை வழங்கும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.