இலங்கையின் தமிழர் பிரதேசத்தில் மீனவரின் வலையில் சிக்கிய அதிசயமீன்..!! மலைக்க வைக்கும் விலை..!!

கூரல் எனும் பெயரிடப்பட்ட மீனையே இங்கு காண்கிறீர்கள். 27 கிலோ கிராம் நிறையுடைய இம் மீன் நேற்றைய நாளில் 247, 000 ரூபாவுக்கு விலை போனது. இந்த மீனை வெட்டி அதன் வயிற்றினுள் காணப்படும் நெட்டி எனும் ஒரு மருத்துவப் பொருளை எடுப்பார்கள்.அதனைப் பதப்படுத்தி பவுடராக்கி ஆண்மைக் குறைபாட்டை நீக்கும் மருந்து தயாரிப்பதற்குப் பயன்படுத்துவதாக மீனவர்கள் கூறினார்கள்.தற்போதைய காலத்தில் தான் இந்த மீன் பிடிபடுவது வழக்கம்.பின்னர்
மீனின் சதைகளைக் கருவாடு ஆக்குவார்களாம்.இதன் நெட்டி அறுவைச் சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் உட்தையலுக்கான நூலாக பயன்படுத்தப்படுகிறது. தையல் நூலை வெட்டி எடுக்கத் தேவையில்லையாம். காலப்போக்கில் அது உடலோடு சேர்ந்து விடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தகவல் மூலம்: முகநூல்- வேதநாயகம் தபேந்திரன்