இலங்கையில் சினிமா ரசிகர்களுக்கு பெருமகிழ்ச்சியான செய்தி…சற்று முன் வெளியான அறிவிப்பு..!!

இலங்கையில் மீண்டும் சினிமா திரையரங்குகளை திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய நாடு முழுவதும் உள்ள சினிமா திரையரங்குகளை எதிர்வரும் 27ஆம் திகதி முதல் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.சுகாதாரப் பரிந்துரைகளுக்கு அமைய திரையரங்குள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் கடந்த மார்ச் மாத இறுதி பகுதியில் மூடப்பட்டது.எனினும், நாட்டில் தற்போது கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் மீண்டும் 27ஆம் திகதி முதல் திரையரங்குகள் திறக்கப்படுவதாக கலாச்சார விவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்