சூரிய கிரகணத்தால் வல்லிபுர ஆழ்வார் திருத்தலத்திற்குப் பூட்டு..!!

யாழ். வடமராட்சி துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம் எதிர்வரும் சூரிய கிரகணத்தன்று காலை 10 மணிக்கு மூடப்படவுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சூரிய கிரகணம் இடம்பெறவிருப்பதால் அன்றைய தினம் காலை 10 மணியுடன் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் பூசைகள் அனைத்தும் முடிவடைந்து ஆலயக் கதவுகள் மூடப்படவுள்ளன.இந்த தகவலை ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.பின்னர் மாலை 3 மணிக்கு மீண்டும் ஆலயத்தின் கதவுகள் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறவுள்ளன.இதேவேளை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆலயத்துக்கு வரும் பக்கதர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வருவதுடன், ஆலயத்தில் சமூக இடைவெளியை பேண வேண்டும் எனவும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.