தென்னிலங்கையில் மீண்டும் கொரோனா பரவும் ஆபத்து..!! ஒரு பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை..!!

தென்னிலங்கையின் ஒரு பகுதி கொரோனா ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதியாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள பிராந்திய நாடுகளிலிருந்து நோயாளர்கள் இலங்கைக்குள் நுழைய முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.மீன்பிடிப் படகுகள் மூலம் இந்தியா உட்பட ஏனைய நாடுகளில் இருந்து அம்பலங்கொட பகுதிக்குள் நுழையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனை தடுப்பதற்காக மீனவர்களை தெளிவுப்படுத்து சிவப்பு எச்சரிக்கை அம்பலங்கொட பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.சட்ட ரீதியாக வர முடியாத இந்திய உட்பட நாடுகள் பலவற்றின் கொரோனா தொற்றாளர்கள் பல்வேறு முறைகளை பயன்படுத்தி கடலுக்கு செல்லும் இலங்கை மீனவர்களை ஏமாற்றி நாட்டுக்கள் நுழைய முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அந்த தகவலுக்கமைய இந்த சிவப்பு எச்சரிக்கை விடுப்பதற்கு அம்பலங்கொட பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.இலங்கையில் கடந்த 50 நாட்களாக சமூக மட்டத்தில் எந்தவொரு கொரோனா நோயாளர்களும் அடையாளம் காணப்படவில்லை. எனினும் இவ்வாறு வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக உள்நுழைபவர்களால் மீண்டும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.