பணவரவை அதிகரிக்கும் குபேர கடவுளின் மூல மந்திரம்…!!

செல்வத்திற்கு அதிபதி லட்சுமி. அதைக் கண்காணித்துக் காப்பவர் குபேரன். இவ்விருவரையும் இணைத்து லட்சுமி குபேர வழிபாடு செய்து வரச் சீரான செல்வம் நமக்கு வந்தடையும். இழந்த செல்வத்தையும், மீட்டுத் தரும் லட்சுமி குபேரர் பூஜை மிகவும் பிரசிதிபெற்றது.


மந்திரம்: “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லஷ்மி குபேராய நம”

குபேரனுக்குரிய வடதிசையை பார்த்தவாறு அமர்ந்து, இந்த மூல மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதிக்க வேண்டும். இதை ஒவ்வொரு வெள்ளியன்றும் செய்து வர உங்களுக்கு வீண் செலவுகள் ஏற்படாது.

குபேர வழிபாடு செய்ய நினைப்பவர்கள் செப்புத் தகட்டில் செய்யப்பட்ட குபேர எந்திரத்தை வாங்கி வந்து வெள்ளிக்கிழமைகளில் குபேர எந்திரத்தின் நான்கு முனைகளிலும் மஞ்சள், சந்தனம் மற்றும் குங்குமம் இட்டு, பூக்கள் சாற்றி, எந்திரத்திற்கு முன்பாக ஒரு தட்டில் சிறிது மஞ்சள் அட்சதை அரிசியை வைத்து தூபங்கள் கொளுத்தி, குபேர காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதித்து வருவதால் நீங்கள் விரும்பிய பணவரவு அதிகரிக்கும். செல்வம் பெருகும்.