பாம்பு பால் குடிக்காது என தெரிந்தும் பாம்புப் புற்று அருகில் பால் வைத்து வணங்கும் வழக்கம் எதற்கு தெரியுமா?

இப்போது தான் மக்களது வசிப்பிடம் என்றால் மக்கள் மட்டும் உள்ளனர். முற்காலங்களில் மக்கள், ஆபத்தான விலங்குகள் வசிக்கும் இடங்களிலும் வசித்து வந்தனர். அந்த இடங்களை சீர் திருத்தி முழுதாக மனிதர்கள் மட்டுமே வாழும் இடமாக மாற்றியதே இப்போதைய நாகரீகம்.


இதற்கு முன்னதாக விஷமிக்க பாம்புகள் மற்றும் விலங்குகளுடனும் அவர்கள் நெருக்கமாக வாழ்ந்து வந்தார்கள். அப்போது காட்டு விலங்குகள் குறித்தும் நன்கு அறிந்திருந்தனர். அப்படி என்றால் பாம்பு பால் குடிக்காது என்பதையும் தெளிவாக அறிந்திருப்பார்களே? பிறகு ஏன் புற்றுக்கு பால் வைக்கிறார்கள்? இந்த சந்தேகமெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்து கொண்டே இருக்கும்.

ஏனெனில் அதன் இனப்பெருக்கத்தை தடுக்கவே இந்த ஏற்பாடு. ஆம், பாம்புகள் குட்டி ஈன்றால் ஒன்று இரண்டெல்லாம் கிடையாது, வதவதவென குட்டிகளை போட்டுக்கொண்டே இருக்கும். மக்கள் வாழ்விடமும் அருகில் இருப்பதால் இந்த இனப்பெருக்கம் மனித இனத்திற்கு பாதகமாக அமைந்து விட கூடாது என்பதற்காகவே பால் வைத்து வணங்கும் வழக்கம் பிறந்தது.

பாலுக்கும் இதற்கும் என்ன தொடர்பு என நீங்க கேட்க வருவது புரிகிறது. பாம்பானது தனது இணையை கவர ஒருவித வாசனை திரவியத்தை உடலில் உற்பத்தி செய்யும். இந்த வாசனையை கொண்டு இணைய வேண்டிய பாம்பு தேடிவரும். இந்த வாசனையை கட்டுப்படுத்தும் திறன் பாலிற்கு உண்டு.

பாலின் மணம் இணைய வேண்டி வரும் பாம்பிற்கு குழப்பத்தை ஏற்படுத்தி இனப்பெருக்கம் நடைபெறாமல் செய்துவிடும். பாம்புகள் கூட்டமாக இருக்கும் புற்றின் அருகில் பால் வைக்கும் போது, இவற்றின் இனப்பெருக்கம் தடுக்கப்படுவதாலே பால் வைத்து வணங்கும் வழக்கம் உருவானது.