மீன் சந்தையில் நல்ல மீனை அடையாளம் கண்டுகொள்ள அற்புதமான இரண்டே வழிமுறைகள்.!! இனி இதைப் பார்த்து வாங்குங்கள்..!

எந்த மீனில் அதிகம் முள் இருக்கும்? எதில் அதிகம் இருக்காது? எது குழம்புக்கு ஏற்றது? எது வறுவலுக்கு ஏற்றது? மீன்வாங்கும் போது, பல நாட்களாக பனிக்கட்டிக்குள் ஊறவைத்த மீனை தலையில் கட்டி விடுவார்களோ? ஃப்ரஸ் மீன்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது? இப்படி, புதிதாக மீன் வாங்க போகும் போது, இந்த சந்தேகம் எல்லாம் எழுவது வழக்கமே. ஒவ்வொரு முறையும் அனுபவப்பட்டு தான் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. அப்படி இருக்க, இந்த சந்தேகங்களை களைய மீன்களில் உள்ள ஒரு சில எளிய அறிகுறிகள் மூலம் கெட்ட மீன்களை தவிர்த்து விடலாம்.


முதலில் மீனின் தரம், பார்க்க பளபளப்பாக மற்றும் நிறமுள்ள மீன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும். மீனின் நிறமே தரத்தை கணக்கிடம் முதல் அளவுகோல்.மீனின் சதை துண்டம் வெளிர் நிறத்தில் இருக்க வேண்டும். மங்கலாக அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்க கூடாது.மீனின் கண்களை பொறுத்தவரையில் அவை பிரகாசமாக இருக்க வேண்டும், மூழ்கி இருக்க கூடாது. கை தேர்ந்தவர்கள் இதை வைத்தே கண்டுபிடித்து விடுவார்கள். அதே போல் கண்கள் கலங்கியும் இருக்க கூடாது.

மீன் தொடுவதற்கு உலர்ந்ததாகவும் விரல் கொண்டு அதன் மேல் அழுத்தும் போது, ஸ்ப்ரிங் போல எழ வேண்டும். கல் போல் கடினமாக இருத்தல் கூடாது.அடுத்து செதில்கள் அதிகமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும். செதில்கள் வெளியே வந்தது போல இருப்பின், மீன் பழையதாக இருக்கலாம். மீனின் செவுள்களுக்கு பின்னால் சிவப்பு நிறம் மட்டுமே இருக்க வேண்டும். பழுப்பு அல்லது நீல நிறம் இருந்தால் தவிர்த்து விடலாம்.

மீன்வாசனை இருக்கலாம். ஆனால் துர்நாற்றம் வீசக்கூடாது. மீனின் வாலானது கடினமாக இருக்க வேண்டும். இந்த டிப்ஸ்களை வைத்து ஓரளவு நல்ல மீன்களை அடையாளம் கண்டுகொள்ளலாம். பெரும்பாலும் மீனின் கண்கள் மற்றும் செவுள்களை வைத்தே கெட்டுப்போன மீன்களை தவிர்த்து விடலாம்.