மனதில் நினைத்த காரியங்களை நிறைவேற்றும் ஸ்ரீசக்தி விநாயக சாயிபாபா..!!

இந்த ஸ்ரீ சக்தி விநாயகா சாயிபாபா ஆலயத்தில் மனமுருக வேண்டி வழிபட்டால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மனசஞ்சலம் தீரும். தொழில் முடக்கம் அகலும். நம்மைப்பிடித்த நோய் நோடிகள் எல்லாம் தவிடு பொடியாகும் என்பது ஐதீகம்.

பாபாவின் முன்னால் தியான மண்டபம் கட்டப்பட்டு பிரதி வியாழக்கிழமை தோறும் மூன்று ஆரத்திகளும் சிறப்பாக செய்யப்படுகின்றன. கடந்த 2016ம் ஆண்டில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது.
வியாழக்கிழமை தோறும் மூன்று ஆரத்திகளின் போது அன்னதானமும் சிறப்பாக நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் சமூக அக்கறையுடன் மருத்துவ முகாம்களும், ரத்தவகை கண்டறியும் முகாம், ரத்த கொதிப்பு கண்டறிதல் முகாம், நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம், கண்பரிசோதனை முகாம் நடத்தப்பட்டுள்ளது. மேலும் பட்டிபுலம் சாயி டிரஸ்ட் மற்றும் சக்தி விநாயகர் வழிபாட்டு மன்றமும் இணைந்து கடந்த மாதம் கல்வி உதவித்தொகையாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளது.தற்போது இக்கோயிலின் செயல்பாடுகளை தலைவர் ஞானப்பிரகாசம், செயலாளர் கலியமுர்த்தி, பொருளாளர் ராமலிங்கம் மற்றும் 30 பேர் உறுப்பினர்களைக் கொண்ட சக்தி விநாயகர் வழிபாட்டு மன்றம் செய்து வருகின்றது.