உங்களுக்கு விருப்பமான சாயி நாமத்தை பாபாவுக்காக 10 நிமிடம் ஒதுக்கி தினமும் சொல்லி வாருங்கள்.! நினைத்தது எல்லாம் நடக்குமாம்.!!

சாயி என்று கடவுளை நினைத்தால் அவர்களுக்கு உதவி செய்ய பாபா இருக்கிறார். காலையிலும் மாலையிலும் குறைந்தது 10 நிமிடம் பாபாவுக்காக ஒதுக்கி உங்களுக்கு விருப்பமான சாயி நாமத்தை சொல்லுங்கள்.

உதாரணமாக ‘சாயி சாயி’ அல்லது ‘ஓம் சாயி நமோ நமஹ ஸ்ரீ சாயி நமோ நமஹ ஜெய ஜெய சாயி நமோ நமஹ’ ‘ஓம் சாயிராம்’ அல்லது ‘ஓம் ஸ்ரீ சாயி நாதாய நமஹ’ என்று உங்கள் விருப்படி சொல்லி வாருங்கள்.

பின்னர் நாள் முழுவதும் சாயிநாமம் உங்கள் இதயத்தில் ஒளித்துக் கொண்டே இருக்கும். பாபாவின் அருள் இருந்தால் மட்டுமே அவரின் நாமத்தை சொல்ல முடியும். பாபாவின் பக்தர்களாகிய நாம் ஒருபோதும் தனித்து இல்லை.