5 வயது மகனுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடிய தந்தைக்கு திடீரென நேர்ந்த சோகம்..!! ( பதற வைக்கும் காணொளி)

5 வயது மகனுடன் வீதியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த தந்தை மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் பார்ப்போரை பதற வைக்கின்றது. சமீபகாலமாக மாரடைப்பால் ஏற்படும் திடீர் மரணம் குறித்த செய்திகள் அதிகம் வெளியாகிவரும் நிலையில், குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பாதார் என்ற பகுதியில் வசித்துவரும் ரமேஷ்சந்த்ரா என்ற நபர் அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் வேலை பார்த்துவந்துள்ளார்.

தற்போது ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தவாறு பொழுதை கழித்துவந்த ரமேஷ்சந்த்ரா தனது 5 வயது மகனுடன் வீட்டுக்கு முன் உள்ள தெருவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அருகில் இருந்த இருசக்கர வாகனத்தின் மீது சரிந்து கீழே விழுந்துள்ளார் ரமேஷ்சந்த்ரா.சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றும் முடியவில்லை, உடனே அருகில் இருந்த மருத்துவமனையில் அவரை அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் இறுதியில் நடந்த இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.