இறப்பைக்கூட தள்ளிப்போடும் தலைமுடி கொண்டை! ஜடையை விரித்துப்போடக்கூடாதென்று சொன்னதற்கு பின்னால் உள்ள காரணம்!

தலையை விரித்துப்போட்டு திரியக்கூடாதென்று தங்கச்சியை அம்மா திட்டிக்கொண்டே இருப்பார். “சும்மாவாச்சும் முடிஞ்சு விடுடி” என்று அதட்டிக்கூறினால் மட்டுமே கொண்டை போடுவாள் என் தங்கச்சி. அம்மா சொன்னது அவளுக்கு மட்டும் இல்லை, நமக்கும் தான். என்ன ஒரே குழப்பமா இருக்கா? இப்போ தான் நாம் முடிவெட்டி பழகியிருக்கோம் பாஸ். ஒரு 70 வருடங்களுக்கு முன்னாடி எல்லாம், ஆண்களும் பெண்களைப் போலவே முடி வளர்த்தியிருக்கின்றனர்.


வெள்ளக்காரன் வந்து கற்றுக்கொடுத்த பழக்கம் இது. அந்தக்கால திருவள்ளுவர், முனிவர்கள், புலவர்கள் படத்தை பார்த்தாலே தெரியும். மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறைக்காமல் காட்டியிருப்பாங்க. ஏன் கொண்டை போடும் பழக்கம் வந்தது? தலைமுடியை விரித்துப்போட்டால் என்ன நடக்கும்? என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், ஆன்மீகத்தோடு சேர்த்த அறிவியலையும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். முனிவர்கள் தவத்தினால் உண்டான சக்தியை தலை உச்சிக்கு அடையச்செய்யும் போது, சக்தி விரயமாகி வெளியில் சென்றுவிடக்கூடாது என்பதற்காக கொண்டையிடும் பழக்கத்தை கடைபிடித்துள்ளனர்.

அப்படி தலையில் கொண்டை இல்லை என்றாலும், தலையை மூடியவாறு ஆடை அணிந்திருப்பார்கள். உடலில் உருவாகும் சக்தி தலை உச்சியை அடைந்த பிறகே உடலை விட்டு வெளியேறும் என்பதால், இவ்வாறு செய்துள்ளனர். இந்த நுணுக்கத்தை கையாண்டு, உடலில் சக்தி விரையம் உண்டாவதை தடுத்து, யோகிகளும், முனிவர்களும் நீண்ட காலம் உயிர் வாழ்ந்துள்ளனர். ஆன்மீகத்தில் முக்கியமானது, உடலின் சக்தி விரயத்தை தடுப்பது.

இந்த முறையானது காலப்போக்கில், மெல்ல மெல்ல அடுத்தடுத்த சந்ததிகளுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டு, நம்முடைய தாத்தா, பாட்டி காலத்தோடு முடிவுக்கு வந்தது. இன்றைக்கும், கிராமத்து பக்கம் வயதானவர்கள், “தலை முடியை விரித்துப்போட்டு திரியாதே” என்று சொல்லக்காரணமும் இது தான். அவங்க சின்னதா சொல்லும் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும், மாபெரும் மர்மங்கள் மறைந்திருக்கும். இது போன்ற இன்னும் பல நம்பிக்கைகளை கிராமப்பக்கம் காண முடியும். உங்களுக்கு தெரிந்தவற்றை எங்களிடம் பகிரலாம்.