மனிதர்களுக்கே முன்னுதாரணமாக ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் அற்புதமான விலங்கினம்..!! வாய்ப்புக் கிடைத்தாலும் முறை தவறாத நேர்மை!!

மனிதர்களைப்போல ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையை கடைபிடிக்கும் உயிரினங்கள் இருக்கிறதா? என்று கேட்டால், உங்களிடமிருந்து என்ன பதில் வரும்? ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் டைனோசர் காலத்திலேயே அழிஞ்சு போச்சு பாஸ்.


இன்னும் அப்பாவித்தனமா இப்படியெல்லாம் கேள்வி கேட்கறீங்களே என்று சொல்லத்தோணும். ஏதோ நம்ம நாட்டில் கலாச்சாரத்தை கொஞ்சம், நஞ்சமாவது கட்டிக்காத்து வருவதால், “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற கான்செப்டை காதில் கேட்கவாவது முடிகிறது.

சரி! நல்லா சிந்தித்து முடிவெடுக்கும் மனித இனத்திலேயே இது முறைதவறிப்போகும் போது, விலங்குகளிடம் எப்படி இந்த நேர்மையை எதிர்பார்க்க முடியும்? என்ற சந்தேகம் வரலாம். நமக்கு ஆறறிவு இருக்கு என்று நமக்கு நாமே சொல்லிக்க வேண்டியது தான். நம்மை விட ஒரு சில விலங்குகள் புத்திக்கூர்மையில் பன்மடங்கு மேம்பட்டவை. அந்த வரிசையில், இணை சேர்ந்த துணைக்கு துரோகம் செய்யாமல் வாழும் விலங்குகளில், டாப் இடம் பிடித்துள்ளது சாம்பல் ஓநாய்கள்.

பல்லூட்டி வகையைச் சேர்ந்த இந்த உயிரினம், கூட்டம் கூட்டமாக வாழக்கூடியது. நமக்கு அரசாங்கள் சட்டதிட்டங்களை வகுத்துள்ளது போல, இவைகளுக்கும் நடத்தை விதிகள் உண்டாம். நம்ம ஊர் பாணியில் கூட்டுக்குடும்பமாக வசிக்கும் இவை, ஒரு சில சமயம் குடும்பத்தில் 30 உறுப்பினர்கள் வரைக்கும் சேர்த்து வாழக்கூடியது. ஒரு பெரிய கூட்டம் என்றால், அதற்கு ஒரு தலைவனும், தலைவியும் இருப்பார்களாம். அவற்றின் கட்டளைக்கு கட்டுப்பட்டே, மற்ற குடும்ப உறுப்பினர்கள் நடந்து கொள்வார்கள்.

கூட்டத்தில் தலைவன், தலைவி மட்டுமே இணை சேர்ந்து, அடுத்த சந்ததியை உருவாக்குகின்றன. அதே போல இரை வேட்டையாடப்பட்டால், தலைவனும், தலைவியும் சுவை பார்த்த பின்னரே மற்ற விலங்குகள் உண்ண முடியும். வருடத்திற்கு ஒரே ஒருமுறை மட்டும் இனப்பெருக்கம் நடைபெறும். பெரும் கூட்டமாகவே வசித்தாலும், தங்கள் துணைக்கு ஒருபோதும் துரோகம் செய்வதில்லை. வாய்ப்பு இருந்தும் முறைதவறி செல்வதில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்ற பாதையில் இருந்து இம்மியளவும் வழி தவறாதவை சம்பல் நிற ஓநாய்கள்.