குழந்தைகளை தொட்டிலில் போட்டால் மட்டும் எப்படி இவ்வளவு அமைதியாகத் தூங்குகிறார்கள்?

குழந்தையை குட்டி பெட்டில் படுக்க வைப்பதோ அல்லது தொட்டி மாதிரி இருக்கும் தூரியில் போட்டு விடுவதை, அந்தஸ்து என்று நினைக்கும் மனநிலை பலரிடத்திலும் காணப்படுகிறது.


நம் அந்தஸ்தை காட்ட குழந்தை தான் கிடைத்ததா என்ன? தொட்டில் கட்டி போடச்சொன்னால், அதை ஏதோ ஏளனமாக பார்க்கின்றனர் படித்த பெற்றோர்களும் கூட. கருப்பையில், குழந்தை பனிக்குடத்தில் மிதக்கும் போது, எந்த அளவுக்கு சௌகாரியத்தை கொடுத்ததோ, அதே அளவுக்கு தொட்டில் கொடுக்கும் என்ற இரகசியம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தொட்டில் கட்டி படுக்க வைக்கப்படும் குழந்தைக்கு, தாய் அருகில் இருப்பது போன்ற உணர்வு இருந்து கொண்டே இருக்குமாம். தாயின் அரவணைப்பு தொடர்ச்சியாக கிடைக்கும் குழந்தைக்கு ஏங்கல் போன்ற பிரச்சனைகள் எல்லாம் வராது. அதே போல நமக்கு மாதிரி, குழந்தையின் முதுகெலும்பு உறுதியாக இருக்காது. தரையிலோ அல்லது பெட்டி போன்ற தூரியிலோ படுக்க வைத்தால், வலி உண்டாகும். வலிக்கிறது என்று குழந்தைக்கு சொல்லத்தெரியாமல் அழுகையாக உணர்ச்சியை வெளிப்படுத்தும்.

தொட்டிலில் போடப்படும் குழந்தையின் முதுகெலும்பு பாதுகாக்கப்படும். பூச்சி, வண்டு போன்றவற்றிலிருந்து பாதுகாப்பளிக்கும். குழந்தைகள் புரண்டு படுக்கும் பொழுது கீழே விழும் பாதிப்புகள் இல்லை. தூளி ஆட்டும் பொழுது தாயின் முகத்தின் குழந்தை பார்ப்பதால் மாறுகண் பிரச்சனை ஏற்படாது.குழந்தை சிறுநீர் கழிக்கும் பொழுது சிறுநீர் துணியின் வழியே வெளியேறி விடுவதால் குழந்தைக்கு எரிச்சல் ஏற்படாது. தொட்டிலில் நிழலில் குழந்தை அதிக நேரம் தூங்கும்.

வீட்டில் பெரியவர்கள் சொல்லும் ஒரு சில அசட்டையாக எடுத்துக்கொண்டு, நாம் தான் பெரிய அறிவாளி என்பது போல கண்டுக்காமல் சென்று விடுவோம். நாலு புத்தகத்தை படித்து நாமெல்லாம் தெரிந்து கொண்டதை, நாலு பேரின் அனுபவத்தை படித்து அறிந்தவர்கள் அவர்கள். ஒரு சில மூட நம்பிக்கைகளை ஒதுக்கிவிட்டு பார்த்தால், முன்னோர்கள் சொன்ன ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும் என்பதே நிதர்சனம்.