பொதுமக்களுக்கு மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்துக்கு வருகை தரும் பொதுமக்கள் தமக்கு உரிய நேரத்தினை ஒதுக்கிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தமக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ளாத எவருக்கும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்துக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான காலப்பகுதிக்குள் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அலுவலகத் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தமது நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.