பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்கள் அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு..!!

யாழ்.மாவட்டத்தில் 990 இளைஞர்,யுவதிகள் செயற்திட்ட உதவியாளர்களாக நியமனம் பெற்று தேர்தல் காலத்தில் இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தமக்கு மீண்டும் உரிய நியமனத்தினை பெற்றுத்தருமாறு கோரி யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களாக நியமனம்பெற்று தமது கடமையை பொறுப்பேற்ற பின்னர் இடை நிறுத்தப்பட்ட பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்கள் தமக்கு வேலை வாய்ப்பினை பெற்று தருமாறு கோரி யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினை இன்று கையெழுத்திருந்தனர்.குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதனை தெரியப்படுத்துவதாகவும்,இது தொடர்பில் தன்னால் முடிந்த முயற்சிகளை எடுப்பதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.