தமிழகத்தையும் விட்டு வைக்காத கொரோனா.!! ஒரே நாளில் 48 பேர் பலி.!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 174 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தைக் கடந்த நாளாக இன்றைய நாள் (புதன்கிழமை) பதிவாகியுள்ளதுடன் கடந்த இரு வாரங்களாக நாளுக்குநாள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டு வருகின்றது.இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து 50 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.மேலும், தனியார் மருத்துவமனையில் 10 பேர் உட்பட இன்று 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த மரணங்கள் 576 ஆக அதிகரித்துள்ளன.அத்துடன், இன்று 842 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன், இதுவரை மொத்தம் 27,624 பேர் மீண்டுள்ளமை பதிவாகியுள்ளது.கடந்த 24 மணித்தியாலத்தில் 25 ஆயிரத்து 463 மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்பதுடன் 24 ஆயிரத்து 621 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.