சவுதி அரேபியாவில் கொரோனாவிற்கு பரிதாபமாகப் பலியான யாழ்ப்பாணக் குடும்பஸ்தர்..!!

யாழ்.வடமராட்சி இமையாணன் மேற்கு கிராமத்தை சேர்ந்த அரசன் செல்வராஜா வயது 51 என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் சவுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சவுதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 14 நாட்கள் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்துள்ளார்.இவர் மூன்று வருடங்கள் அங்கு வேலை செய்துவிட்டு சொந்த ஊர் இமையாணன் மேற்கிற்கு விடுமுறையில் வந்து ஐந்து மாதங்களுக்கு முன் தான் சவூதிக்கு திரும்பியிருந்தார்.சவுதிக்கு இவர் வேலை செய்த நிறுவனம் நேற்று 16ஆம் திகதி இவர் உயிர் பிரிந்ததாக அவருடைய துணைவியாருக்கு அறிவித்துள்ளார்கள்.இவரது இழப்பு அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.