அதிகாலையில் வாள்களுடன் புகுந்து வீடு உடைத்து தீ வைப்பு.!! விலை உயர்ந்த நாய்க்குட்டிகளும் கடத்தல்.!! வவுனியாவில் பெரும் பரபரப்பு..!

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் வாள்களுடன் சென்ற நபர்களால் மோட்டார் சைக்கிள் ஒன்று எரிக்கப்பட்டுள்ளதுடன், நாய்குட்டிகளும் கடத்திச் செல்லப்பட்டுள்ளன.

இன்றைய தினம் அதிகாலை கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த சிலர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மோட்டார் சைக்கிளை தீக்கிரையாக்கியுள்ளனர். அத்துடன், வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களையும் உடைத்துவிட்டு, வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு விலை உயர்ந்த நாய்க் குட்டிகளையும் களவாடி சென்றுள்ளனர்.சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், குற்றத்தடுப்பு பிரிவினர் சிசிரிவி உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.