யாழில் திடீரென மயங்கி வீழ்ந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.!! பெரும் சோகத்தில் உறவுகள்..!

யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் வடமராட்சி அரியாலை பிரதேசத்தில் 3 வயதான சிறுவன் வீட்டிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவனுக்கு தேவையான வைத்திய சிகிச்சை வீட்டிலேயே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.மயக்கத்துடன் அவர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது நிலைமை தீவிரம் என்பதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.உயிரிழந்த சிறுவன் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொண்ட வைத்தியர், கீழே விழுந்த போது தலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.உயிரிழந்த சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.