கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையாக அமுலாகப் போகும் புதிய நடைமுறை..!!

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியின் பின்னர் இலங்கைக்கு வரும் அனைவருக்கும் 3 PCR பரிசோதனைகள் மேற்கொளள்ப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.கட்டுநாயக்க விமான நிலையம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.நாட்டிற்கு வரும் எந்தவொரு பயணியும் தங்கள் நாட்டில் PCR பரிசோதனை மேற்கொண்டமைக்காக அறிக்கையை கொண்டுவர வேண்டும்.அவ்வாறு அவர்கள் பரிசோதனைக்கு உட்பட்டிருந்தாலும் இலங்கை வந்தவுடன் விமான நிலையத்தில் மீண்டும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும்.அறிக்கை வரும் வரை விமான நிலையத்திற்கு அருகில் தடுத்து வைத்திருந்து அறிக்கை வந்தவுடன் அவர்கள் சுற்றுலா பயணத்திற்காக விடுவிக்கப்படுவார்கள்.எனினும், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்துக் கொண்ட ஹோட்டல்கள் அல்லது தங்குமிடங்களில் மாத்திரமே அவர்கள் தங்க வேண்டும்.அதனைத் தொடர்ந்து அவர்கள் நாட்டில் தங்கியிருக்கும் இடங்களில் மேலும் 2 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அத்துடன் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து கண்கானிக்கப்படுவார்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.