கோழி இறைச்சிக்கான அதிக பட்ச சில்லறை விலை நிர்ணயம்..!!

கோழி இறைச்சிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டறியும் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.அதிகபட்ச சில்லறை விலையாக 430 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை மீறி அதிகூடிய விலைக்கு வர்த்தகர்கள் கோழி இறைச்சியை விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் பல கிடைத்துள்ள நிலையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்படடுள்ளது.


இதன்படி தோல் நீக்கப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சிக்கு அதிகபட்ச சில்லறை விலையாக 430 ரூபா நிர்ணயிக்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.