மரம், செடி, கொடிகளுக்கு உயிர் இருக்குமானால் அவற்றிற்கும் ஆன்மா, மறுபிறப்பு இருக்குமா? மறைந்திருக்கும் பிரபஞ்ச இரகசியம்!

உடலில் உயிர் இருக்கும் வரை, அவரா? இவரா? என்று மாரியதையோடு அழைக்கும் நம் மக்கள் தான், உடலிலிருந்து உயிர் பிரிந்துவிட்டால், பாடியை எப்போ எடுப்பாங்க? என்று சொல்வதை கேட்க முடியும். அப்போ மதிப்பும், மரியாதையும் உடலுக்கா? உயிருக்கா? என்ற சந்தேகம் வருகிறதல்லவா? வெறும் காற்றடைத்த பையான உடலுக்குள், ஒரு உயிர் ஓட்டம் இருப்பதாலேயே, உயிர்கள் இயக்கம் நடைபெறுகிறது. விலங்குகளும் அப்படித்தான், மரம், செடி, கொடிகளும் அப்படித்தான்.


உடலில் இருந்து ஆன்மா நீங்கிவிட்டால் உயிர் பிரிந்துவிட்டது என்று சொல்வதைப்போல, தாவரங்களுக்கும் ஆன்மா உண்டு. நல்ல திடகாத்திரமான மனிதருக்கு, திடீரென்று உடலில் இருந்து ஆன்மா பிரிந்து உயிர் போவதைப்போல, நன்கு செழித்து வளரும் மரம், திடீரென்று பட்டுப்போக காரணம் என்ன? எல்லாம் உயிரியக்கம் என்ற செயல்பாடு, உடலை விட்டுப்போவதால் தான். உயிர், ஆன்மா விலங்குகளுக்கு மட்டுமே சொந்தமானது என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது.

மெல்லிய இசை ஒலிக்கப்பட்ட இடத்தில் வளர்ந்த மரம், நல்ல விளைச்சலை கொடுத்திருக்கிறது. மரத்திற்கு ஒரு உயிர் தானே இருக்கிறது. அது எப்படி இசையின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியும்? என்ற சந்தேகம் வரலாம். அறிவியலுக்கு அப்பாற்பட்டு நடக்கும் எத்தனையோ சம்பவங்களை, தினம் தினம் பார்க்கிறோம். ஆனால் மெல்லிய இசை ஒலிக்கப்பட்ட பகுதியில் வளர்ந்த மரம், நல்ல விளைச்சலை கொடுத்த சம்பவம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.

ஒன்றுக்கு உயிர் இருக்கிறது என்றாலே அங்கு ஆன்மா இருக்கிறது என்று அர்த்தம். எந்த ஒரு பொருளையும் ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒன்றரை இன்னொன்றாக மட்டுமே மாற்ற முடியும். இறந்த உடலை மண்ணில் புதைத்தால், அந்த உடல் மக்கி மண்ணோடு மண்ணாக மாறுகிறது. அதன் மேல் ஒரு மரம் வளர்ந்தால், இதன் ஆற்றல் அதற்கு மாற்றப்படும். உடல் இருந்த இடத்தில், இன்னொரு உயிர் உருவாகிறது. சொல்லப்போனால் அதுவும் மறுபிறவி தானே? இதற்கு மேல் யோசித்தால் குழம்பிவிடும். இதோடு முடித்துக்கொள்வோம்.