ஆபத்தை ஏற்படுத்தும் வெங்காயத்தாள்.! யாரெல்லாம் சாப்பிடக் கூடாதெனத் தெரியுமா.? அவசியம் படியுங்கள்..!

அன்றாடம் நாம் உண்ணும் உணவுகளில் தான் எமது ஒட்டுமொத்த நோய்களுக்குமான தீர்வு இருக்கிறது. நாம் கடைகளில் வாங்கும் உணவுகள் என்பது கொஞ்சம் கொஞ்சமாக எம்மை கொல்லும் விஷம்.இதனை உணராமல் நாம் கடை உணவுகளில் ஈடுபாடு கொள்வதால் தான் இன்று வைத்தியசாலை வாசல்களில் காத்திருக்கின்றோம். இன்று நான் பார்க்கப் போவது பல நோய்களுக்கு தீர்வாகும் “வெங்காய தாள் பற்றி தான்.


வெங்காயம் என்பது உடலில் உள்ள கிருமிகளை அழிக்க கூடியது. அத்துடன் இதயத்தை பாதுகாப்பதுடன் ஏராளமான நோய்களுக்கு உதவுகிறது. வெங்காயத் தாளை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது இரத்த செல்கள் அதிகரிக்கின்றது. அத்துடன் இரத்தத்தை சுத்தப் படுத்தி இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கிறது.

இதனால் மாரடைப்பு போன்ற நோய்கள் தடுக்கப் படுகிறது. அத்துடன் சர்க்கரையின் அளவு இதனால் குறைக்கிறது. வெங்காய தாளை பச்சையாக சம்பல் போல் செய்து சாப்பிட சர்க்கரை நோய் முற்றாக குணமடைந்து விடுகிறது. அத்துடன் அதிக டென்ஷன் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கும் இந்த வெங்காய தாள் சிறந்த தீர்வாகிறது.

இதே நேரம் வெங்காய தாளை சிலர் கட்டாயம் சாப்பிட கூடாது என கூறப் படுகின்றது. அதில் இரத்தக் கசிவு நோய் உள்ளவர்கள் வெங்காய தாள் கீரையை சாப்பிடவே கூடாதாம் . இதனை சாப்பிட்டால் இரத்தக் கசிவு அதிகரித்து விடுமாம். அதே போல் குறைந்த சர்க்கரை மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் உடையவர்கள் வெங்காய தாள் சாப்பிட கூடாதாம். இவர்கள் சாப்பிடுவது ஆபத்தில் முடியுமாம்..!!