வேலூர் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் முருகனின் உடல்நிலை கவலைக்கிடம்..!! 17வது நாளாகத் தொடரும் அகிம்சைப் போர்..!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் தனி அறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

முருகன் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பின் மூலம் பேச அனுமதிக்க சிறைத்துறை நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.அதனால், மனவேதனை அடைந்த முருகன் ஜீவசமாதி அடைய வேண்டி கடந்த 1-ந் திகதி முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். முருகனின் உடல்நிலை சோர்வடைந்தால் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது.நேற்று 16 ஆவது நாளாக முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். உண்ணாவிரதம் காரணமாக சுமார் 3 கிலோ எடை குறைந்துள்ள முருகனின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.மேலும், அவரிடம் உண்ணாவிரத்தை கைவிடும்படி சிறையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். முருகனின் உடல்நிலை குறித்து தினமும் சென்னை சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.