நோய்த் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றும் வேப்பிலை மஜிக்..! மக்களே தயவு செய்து இனி இப்படிச் செய்யுங்கள்.!!

நோய் தோற்று காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் அவஸ்த்தை பட்டு வருகின்றனர். இதற்கு இன்று மருந்து கண்டு பிடித்து விடுவார்கள் நாளை மருந்து கண்டு பிடித்து விடுவார்கள் என ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டிருக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. அண்மையில் உலகையே புரட்டிப் போட்டுள்ள போய் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது .


குறிப்பாக தமிழ் நாட்டில் சென்னையிலேயே ஏராளமானவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த நிலையில் எல்லோரிடமும் சானிடைஸர் வாங்கும் அளவு பணம் இல்லை இதனால் இயற்கை முறைக்கு மக்கள் இறங்கி உள்ளனர். இந்த முறை சிறந்தது தான் என வைத்தியர்கள் கூறியுள்ள நிலையில் இயற்கை மருத்துவமாக வேப்பம் இலை மாறி உள்ளது. இதனால் தற்போது சென்னையில் வேப்பம் இலைக்கான கிராக்கி அதிகரித்துள்ளது.

விஷக் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்ட வேப்பம் இலையை சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து வாளி நீரில் கலந்து வாசலில் வைத்து விடுகின்றனர்.

வெளியே சென்று வீட்டுக்குள் வருபவர்கள் இந்த நீரில் கைகள் மற்றும் காலை நன்றாக கழுவிவிட்டு பின் வீட்டுக்குள் சென்று குளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் வெளியில் இருந்து வீட்டுக்குள் நோய்த் தொற்று வராது என நம்புகிறனர்.

அத்துடன் பல வீடுகளில் சாணி கொண்டு வாசலை பூசுகின்றனர். இதனால் நோய் தொற்று குறையலாம் என கூறப்படுகின்றது. பூவில், பர்சில் தலையில் கையில் என அனைத்து இடங்களிலும் தற்போது வேப்பிலை ஆட்சி செய்கிறது. இது முற்றிலும் நோயை அழிக்காவிட்டாலும் நோய் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றும் என நம்பப்படுகிறது..!!