முடி உதிர்தல் பிரச்சனையை நீக்கி நீண்ட கருமையான கூந்தல் வளர இப்படி பயன்படுத்திப் பாருங்கள்.!!

தலை முடி உதிர்தல் இன்று சர்வ சாதாரண விடயமாக இருக்கிறது. ஒரு சிலர் முடி உதிர்ந்தால் உதிரட்டும் நாங்கள் விக் வைத்துக் கொள்கிறோம் என விக் வைத்துக் கொள்கிறோம் சிலர் அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் அவர்களுக்கு கூந்தலே அழகு. அதனால் தான் பலர் தலை முடியை வளர்க்க ஆசை படுகின்றனர்.


சோ நீங்களும் தலைமுடி வளர்க்க ஆசைப்பட்டால் இந்த முறையை பின் பற்றுங்கள். இதற்கு தேவையான பொருட்கள் சுத்தமான நெல்லிக்காய் எண்ணெய், (amla oil) கற்றாழை ஜெல், மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு.முதலில் முட்டை ஒன்றை எடுத்து அதில் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்து வைத்த முட்டையின் வெள்ளை கருவில் இரண்டு கரண்டி நெல்லி எண்ணெய் சேருங்கள்.

அதனுடன் கற்றாழை ஜெல் சேருங்கள் சேர்த்து நன்றாக அடித்து மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். இதனை குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு.. முடியின் வேர் கால்களில் படும் படி நன்றாக இந்த கலவையை தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.

இதனை வாரத்தில் இரண்டு முறை அல்லது ஒரு முறை செய்தால் போதுமானது. முடி கறுமையாகவும் அதே நேரம் அடர்த்தியாகவும் வளரும். அத்துடன் உதிர்ந்த முடிகள் மீண்டும் வளரும். இள வழுக்கை என்றால் முடி வளரும். சோ வழுக்கையிலும் முடி வளர மேல் குறிப்பிட்ட குறிப்பை பின் பற்றவும்..!