வீட்டில் சாதம் மீதமாகிவிட்டதா..? வீணாக கொட்டாமல் இப்படிச் செய்தால் போதும்..சுவையான இட்லி உங்கள் கைகளில்.!!

சிலருடைய வீட்டில் வயிற்றை நிறைக்கவே சோறு இருக்காது ஆனால் பலர் வீட்டில் மீதமிருக்கும் சோற்றை சாப்பிட ஆள் இருக்காது. மீதமாகும் சோற்றை சில நேரம் வீணாக கொட்டி விடுவோம், இன்று நாம் பார்க்கப் போவது மீதமுள்ள சோற்றை வீணாக கொட்டாமல் சுவையான இட்லி செய்வது எப்படி என்று தான்.


இதற்கு தேவையானவை: மீதமான சோறு ஒரு கப் என்றால் அரை கப் ரவை. சிறிதளவு தயிர், சுவைகேற்ப உப்பு. முதலில் மீதமுள்ள சோற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஊற வைத்து வடித்த ரவையையும் சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள்.

இதனுடன் தயிர் மற்றும் உப்பு சேர்த்து இட்லி மா பதத்திற்கு மிக்ஸ் செய்து வையுங்கள். பின் இட்லி அச்சில் எண்ணெயை தடவி மிக்ஸ் செய்து வைத்திருக்கும் இட்லி மாவை ஊற்றி இறக்குங்கள். இந்த இட்லி நாம் சாதாரணமாக செய்யும் இட்லியை விட சுவையானதாக இருக்கும்.

இது ஆரோக்கியமானது, சோறு மீதமாகிவிட்டால் வீணாக கொட்டாமல் காலை அல்லது இரவு உணவாக மாற்றிக் கொள்ளுங்கள்..!!