அதிக சத்துக்கள் உள்ள காளானை இவர்கள் மட்டும் சாப்பிடக் கூடாதாம்..! ஏன் தெரியுமா ..?

காளானை விரும்பி சாப்பிடாத யாருமே இருக்க மாட்டார்கள். காளானின் சுவை எல்லோருக்கும் பிடிக்கும். இதனை ஏழைகளின் மாமிசம் என கூறக் காரணம் கோழி இறைச்சி சுவையில் காளான் இருப்பதால் தான். கிடைக்கும் போதெல்லாம் காளானை சாப்பிடும் நாம் காளானில் உள்ள சத்துக்களையும் என்ன என்ன நோய்க்கு தீர்வு என்பதையும் பார்ப்போம்.


காளானில் உணவில் சேர்த்துக் கொண்டால் இதயம் சம்மந்தப் பட்ட பல நோய்கள் தீர்ந்து விடும். இதயத்திற்கு சிறந்த பாதுகாப்பு என்று காளானை கூறலாம். இதய அடைப்பு, இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்தவர்கள் காளான் அதிகம் சாப்பிடலாம்.

அதே போல் காளானில் சூப் செய்து குடித்து வர புற்று நோய் குணமாகும். குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் மார்ப்பக புற்று நோய்க்கு இது சிறந்த மருந்தாகும். காளானில் உள்ள சத்துக்கள் புற்று நோய் செல்களுடன் போராடி புற்று நோய் செல்களை அழித்து விடுகிறது.

அதே போல் சிறுவர்களுக்கு காளானை உணவு சமைத்து கொடுப்பதால் ஞாபக சக்தி அதிகரிக்கிறது. பசியின்மை உள்ளவர்கள் காளான் சாப்பிட்டு வர நன்றாக பசி எடுக்கும். காளானை பாலூட்டும் தாய் மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம். காளான் தாய்ப் பாலை வற்ற வைக்கும் என்பதால் இவர்கள் சாபிட கூடாது என கூறப் படுகின்றது..!!