குடும்பத் தகராறினால் விபரீத முடிவை எடுத்த பெண் ஊடகவியலாளர்..!!

இலங்கையில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.திலினி பவித்ரா என்ற பெண் ஊடகவியலாளர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த ஊடகவியலாளர் தீயிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த இந்த ஊடகவியலாளர் குடும்ப பிரச்சினை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.