இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமனம்..!!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.இதேவேளை கட்சியின் பிரதி தலைவராக அனுஷா சிவராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பதவி இதுவரை எவருக்கும் வழங்கப்படவில்லை என்பதோடு, மறைந்த ஆறுமுகன் தொண்டமானில் இழப்பினை ஈடுசெய்ய முடியாமையே இதற்கு காரணம் எனவும் கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து கட்சியின் நிர்வாக நடவடிக்கைகளுக்காக இடைக்கால நிர்வாக சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த இடைக்கால நிர்வாக சபை இன்று காலை ஒன்று கூடி இந்த புதிய முடிவுகளை எடுத்துள்ளது.இதேவேளை கட்சியின் பிரதி தலைவராக அனுஷியா சிவராஜா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் தலைவராக மத்திய மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் ரமேஷ் தெரிவு செய்யப்பட இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.