ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு பின் அதிரடி முடிவுகளை எடுத்த இலங்கை மத்திய வங்கி..!

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் புதிய கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்திருக்கின்றது. நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததுடன், நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை சீர் செய்வதற்காக மத்திய வங்கியின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை எனக் கூறியதுடன், நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டத்தை முன்வையுங்கள் அல்லது என்னுடைய திட்டத்தை அங்கீகரியுங்கள்.அதனை உடனடியாக செய்யுங்கள் எனப் பணித்திருந்ததுடன், முடியாவிட்டால் பதவி விலகுங்கள் என கடுந்தொனியில் கூறியிருக்கின்றார்.இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட மத்திய வங்கி அதிகாரிகள் புதிய கடன் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கின்றனர்.எனினும் இது தொடர்பாக ஜனாதிபதி பதில் எதனையும் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.