யாழில் இராணுவச்சீருடையை ஒத்த ஆடை, அடையாள அட்டையுடன் மீட்கப்பட்ட மனித எச்சம்..!!

பளைப் பகுதியில் இராணுவச்சீருடையை ஒத்த உடை, எலும்புக்கூடு, மற்றும் தென்னிலங்கையை சேர்ந்த ஒருவரின் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் நிலத்தின் கீழிருந்து மீட்கப்பட்டுள்ளன.புலோப்பளை பகுதியில் நேற்று (16) இவை மீட்கப்பட்டன.

காணி உரிமையாளர் ஒருவர் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது, புதைக்கப்பட்ட நிலையில் அவை மீட்கப்பட்டன.கேகாலை, ஹேமதகம பகுதியை சேர்ந்த நுவன ஹெனயலேஜ் அமில உபநந்த என்ற நபரின் அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.இராணுவ ஆடையை ஒத்த உடை மற்றும் சில உபகரணங்களும் மீட்கப்பட்டன.யுத்தத்தின் போது கொல்லப்பட்ட இராணுவச்சிப்பாயின் எச்சங்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.தேசிய அடையாள அட்டையின் படி, அந்த எச்சத்திற்குரியவர் 1970 ஜனவரி 10 ஆம் திகதி பிறந்தார்.பளை, புலோப்பளை பகுதியில் 1990களில் இருந்து புலிகளிற்கும், இராணுவத்திற்குமிடையில் கடுமையான மோதல்கள் பல்வேறு காலகட்டங்களில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.