பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் தூய்மைப்படுத்தல் நடவடிக்கை..!

பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட முன்னதாக தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் கொழும்பை அண்டிய பகுதிகளில் காணப்படும் பாடசாலைகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் பூர்த்தியாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எதிர்வரும் 29ம் திகதி முதல் ஜூலை மாதம் 5ம் திகதி வரையில் பிரதேச மட்டத்தில் பாடசாலைகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஏற்கனவே சில பகுதிகளில் பாடசாலைகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெற்கு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.