மிரட்டியது போலவே வெடி வைத்து தகர்த்தெறிந்த வடகொரியா!! கொரியத் தீப கற்பத்தில் யுத்தம் ஆரம்பம்..?

தென்கொரியாவின் எல்லையில் அமைந்திருந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு அலுவலகத்தை வடகொரியா இன்று வெடிவைத்து தகர்த்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் தென்கொரியாவின் அதிகாரிகள் உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளனர்.இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் பதற்றம் ஏற்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கையை வடகொரியா எடுத்துள்ளது.இந்த அலுவலகம் 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. எனினும், கொரோனவைரஸ் பரவலை அடுத்து இந்த அலுவலகம் வெறுமையாகியிருந்தது.இரண்டு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் முறுகல் ஏற்பட்டமையை அடுத்து இந்த அலுவலத்தை தகர்க்கப்போவதாக வடகொரிய அதிபர் அண்மையில் எச்சரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.