உமாஓயா அபிவிருத்தி திட்டத்தில் பணியாற்ற 85 ஈரானியர்கள் இன்று இலங்கை வருகை.!!

உமாஓயா அபிவிருத்தி திட்டத்தில் பணியாற்றும் 85 ஈரான் நாட்டவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

ஈரானின் விசேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்கள் தற்போது தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.உமாஓயா நீர்மின்சார திட்டம் இந்த வருட இறுதிக்குள் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த திட்டம் நிறைவுறுத்தப்படும்போது நாட்டின் வருடாந்த தேசிய மின்சார உற்பத்தியில் 230 கிகாவோட்ஸ் மின்சாரம் சேர்க்கப்படும்.இந்த திட்டத்துக்கான மொத்த செலவு 529 மில்லியன் டொலர்கள். இதில் 85 வீத செலவை ஈரானிய அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.