ஊரடங்கு உத்தரவை மீறிய சுகாதார அமைச்சர் அதிரடியாக தகுதிநீக்கம்..!! நியூஸிலாந்து பிரதமர் அதிரடி..!!

ஊரடங்கு உத்தரவை மீறி குடும்பத்துடன் கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட நியூசிலாந்து சுகாதார அமைச்சர் டேவிட் கிளார்க் அமைச்சரவை அந்தஸ்து நீக்கப்பட்டு இணையமைச்சராக தகுதியிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நியூசிலாந்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்பத்துடன் 20 கிலோ மீற்றர் நடைப்பயிற்சி மேற்கொண்டதாக ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சர் டேவிட் கிளார்க்கை, இணை நிதியமைச்சராக நியமித்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் உத்தரவிட்டுள்ளார்.டேவிட் செய்த குற்றத்துக்கு பதவி நீக்கம் செய்திருப்பேன் என்றும் ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க டேவிட்டின் பங்களிப்பு தேவை என்பதால் தகுதியிறக்கம் செய்ததாகவும் பிரதமர் ஜசிந்தா தெரிவித்துள்ளார்.அத்துடன், ஊரடங்கு உத்தரவை அமைச்சர் மீறியமை குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்துத் தெரிவித்த பிரதமர் ஜசிந்தா, சுகாதார அமைச்சர் டேவிட் கிளார்க்கின் இந்தச் செயற்பாடு முட்டாள் தனமானது எனத் தெரிவித்துள்ளார்.அத்துடன், கிளார்க்கிற்கு நடந்த இந்த நிலை அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, ஸ்கொற்லாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி கெத்ரின் கொல்டெர்வுட் தனது இரண்டாவது வீட்டிற்கு இரண்டு முறை சென்றுவந்த நிலையில் விதிகளை மீறியதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.