கையடக்க தொலைபேசி ஊடாக மின் பாவனையை கட்டுப்படுத்தும் முறையை கண்டுபிடித்து சாதனை படைத்த மாணவன்.!!

ஸ்மாட் கையடக்க தொலைபேசி (SMART Hand Phone) ஊடாக மின்பாவனையை கட்டுப்படுத்தும் நவீன தொழிநுட்ப முறையை பாடசாலை மாணவன் கண்டுபிடித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் உயர்தர தொழிநுட்ப பிரிவில் கல்விகற்று வரும் அப்துல் லத்தீப் அஹமது யமீன் என்ற மாணவனே இந்த புதிய தொழிநுட்ப முறையை கண்டுபித்து சாதனை புரிந்துள்ளார்.வீடுகள், அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் மின்குமிழ்கள் மற்றும் இதர மின் பாவனைப் பொருட்களை கையடக்க தொலைபேசி ஊடாக தூரத்தில் நின்றவாறே இலகுவாக On, Off செய்து கொள்ள முடியும். இந்த தொழிநுட்ப முறையானது குறைந்தளவிலான மனிதவலு மற்றும் குறைந்த நேரத்தில் கூடுதலான பயன்பாட்டை பெறக்கூடியதாக உள்ளது.தற்போது கொரோனா தொற்று நோய் அச்சம் ஏற்பட்டுள்ளதால் மின் ஆழிகளில் கை விரல்களின் தொடுகை இல்லாமல் தமது கையடக்க தொலைபேசிகள் ஊடாக இலகுவாக மின் ஆழிகளின் கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடியும் என இந்த மாணவன் தெரிவித்தார்.

அரசாங்கம் மற்றும் விஞ்ஞான புத்தாக்க ஆணைக்குழுவும் தனது கண்டுபிடிப்புக்கான அங்கிகாரத்தை வழங்குவதன் ஊடாக இந்தப் புதிய தொழிநுட்ப முறையை மேலும் விஸ்தரிக்க முடியும் என்றும் ஊடகங்களுக்கு மாணவன் தெரிவித்தார்.