சற்று முன்னர் யாழ் நீர்வேலியில் கோர விபத்து.!! தீயணைப்பு வீரர் பரிதாபமாகப் பலி…!! மேலும் சிலர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்..!(காணொளி இணைப்பு..!)

யாழ்.மாநகர சபையில் இருந்து பருத்தித்துறைக்குச் சென்ற தீயணைப்பு வாகனம் நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்தார். நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு முன்பாக இவ்விபத்து நடந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த தீயணைப்பு வாகனத்தின் முன் பகுதி சில்லு திடீரென காற்றுப் போன காரணத்தினால் வாகனம் வீதியை விட்டு விலகி தோட்டத்திற்குள் பாய்ந்துள்ளது.இச் சம்பவத்தில், தீயணைப்பு பணியில் ஈடுபடுபவர் இருவர் படுகாயமடைந்தனர். மயக்கமடைந்த நிலையில் வீதியோரமாக இருந்த ஒருவர் மற்றும் படுகாயமடைந்த மற்றவர், நோயாளிகள் காவு வண்டியின் உதவியுடன் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.