கோமாவில் இருப்பவர்களைக் கூட பிழைக்க வைக்கும் அற்புதமான மூலிகைச்சாறு..!!

ஆயுர்வேதத்தில் நாள்பட்ட நோய்களுக்கு தீர்வு உண்டா என்பது பலருக்கும் அறியாத தகவலாகவே உள்ளது. இப்படி நிரந்தர நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைகள் இருக்கத்தான் செய்கின்றனர். படுத்த படுக்கையில் கிடப்பவர்கள் கூட எழுந்திருக்கும் அளவிற்கு ஆயுர்வேத மருத்துவமும் கண்டுபிடிப்புகளும் வளர்ந்துள்ளன. ஆனால் மக்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வு தான் இருப்பதில்லை.

அந்த வகையில் பார்க்கும் போது 61 வயது பெண், கோமாவில் படுத்த படுக்கையாக இருந்த ஒருவர் ஆயுர்வேத முறைப்படி சிகச்சை பெற்று பலனடைந்துள்ளார். அவருக்கு கொடுக்கப்பட்ட ஆயுர்வேத சிகிச்சை முறைகளைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

கோமா சிகச்சை இதே சிகச்சையை 28 ஆகஸ்ட் 2010 ல் கோமா நிலைக்கு சென்ற 61 வயது பெண்ணுக்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைகள் கொடுத்து சரி செய்து உள்ளனர். அந்த பெண்ணை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து 28 நாட்களுக்கு இரைப்பை குழாய், ஆக்ஸிஜன் உள்ளிழுத்தல், ரெயிலின் குழாய் மற்றும் சுவாச அமைப்பு எல்லாம் வைத்து பராமரித்து வந்துள்ளனர். பிஸியோதெரபி, சிம்ட்டோமேட்டிக் சிகிச்சை போன்றவற்றையும் செய்துள்ளனர்.

தூப நாசியா கோமா நிலையில் இருந்த அவருக்கு ஆயுர்வேத முறைப்படி தூப நாசியா செய்யப்பட்டுள்ளது. தூப நாசியா என்பது மூலிகை புகையை ஏற்படுத்தி சுவாச பாதையை சுத்தம் செய்வது ஆகும். இதற்கு திரிகடுகு பொடி பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை கோமா நிலையில் உள்ள அவரின் உணர்திறன் மற்றும் தசை செயல்பாட்டுக்கு உதவி செய்துள்ளது.

பிரதாமனா நாசியா இந்த நாசியா முறையில் திரிகடுகு சூரணம், இஞ்சி, கருப்பு மிளகு, திப்பிலி பவுடர் களை சேர்த்து சூரணம் தயாரிக்கப்படுகிறது. இந்த சரண பொடியை நோயாளியின் மூக்கில் 15 செமீ தொலைவில் குழாய் வழியாக மூக்குத் துவாரங்களில் செலுத்தப்படும். இதை 7 நாட்களுக்கு தொடர்ந்து செய்து வருகின்றனர்.

தூப நாசியா அடுத்து தூப நாசியா முறை செய்யப்படுகிறது. இதில் நோயாளியை தூப குச்சியின் நறுமணத்தை நுகர வைக்கின்றனர். இதை செய்ய 5 மூலிகை மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. வசம்பு, பெருங்காயம், குக்குலு, ஜட்மண்ஸி, நெல்லிக்காய் போன்ற மருந்துகள் சங்கயஸ்தாப மருந்துகள் என்று அழைக்கப்படுகிறது. இது உடலுக்கு உணர்வுகளை கொடுக்கிறது. இதை ஏழு நாட்களுக்கு மூன்று தடவை என காலை வேளையில் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

பரிசோதனை அதே மாதிரி தினமும் கோமா நோயாளியின் இரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, இதயத் துடிப்பு, உடல் திரவ நிலை, சுவாச திறன், ஆக்ஸிஜன் அளவு, நோயாளியின் உடல் மெட்டா பாலிசம் மற்றும் திசு ஆக்ஸினேற்றம் போன்றவற்றையும் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.

நாசியாவிற்கு முன் மற்றும் பின் கண்காணிக்க வேண்டியவை கண்கள் திறப்பு வலியுடன் திறத்தல் பேசுதல் திடீர் அசைவு பேசும் திறன் எதாவது சத்தம் கொடுத்தல் வார்த்தைகள் தடுமாறி பேசுதல் குழப்பம் அசைவுகள் வலியுடன் கைகளை நீட்ட முயற்சித்தல் வலி குறைதல் உடலில் வலி கட்டளைக்கு இணங்குதல்,3 நாட்களில் கண்கள் திறப்பு ஏற்பட்டு விட வாய்ப்புள்ளது என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆயுர்வேதப்படி வாதம், பித்தம், கபம் மாற்றம் தான் மூளை செயலிழப்பை ஏற்படுத்தி விடுகிறது

திரிகடுகு இந்த மூலிகை பொடி மூளை செயலிழப்பை சரி செய்ய உதவுகிறது. இது நியூரோ டிரான்ஸ்மிட்டர் மாதிரி செயல்பட்டு மூளையில் உள்ள நரம்புகளை தூண்டி உணர்வு கடத்தலை சரி செய்கிறது. இதனால் மூளை செயல்பட ஆரம்பித்து விடும். அப்புறம் நோயாளியால் அசைவுகளை தர முடிகிறது.

முடிவு இது ஆயுர்வேதத்தில் உள்ள மிகச் சிறந்த முறை. இந்த மூலிகை மூக்கின் வழியாக உட்புகுத்தி மூளைக்கு சென்று உடம்பில் உள்ள பித்தம், கபம், வாத செயல்பாட்டை சரி செய்கிறது. மூளையின் உணர்திறனை மீட்டெடுப்பதில் சிறந்து விளங்குகிறது. இந்த மருந்துகளில் உள்ள உஸ்னா, டிக்ஸ்னா, வைவெய் மற்றும் விக்கிசி போன்ற பொருட்கள் மூளையில் செயல்பாட்டை தூண்டுகிறது. கோமாவில் இருந்த இந்த பெண்ணின் மீட்பு ஆயுர்வேத மருத்துவத்தை உயர்த்தி உள்ளது என்றே கூறலாம்.

மருந்துகளின் எந்த வித நேரடி தொடர்பும் இல்லாமல் நாசியா வழியாக மட்டுமே கோமா வை குணப்படுத்தி யது ஆச்சர்யத்தை அளிக்கிறது. இந்த பஞ்சகர்மா தெரபியின் 14 நாட்களிலேயே நோயாளிக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். கோமா நிலையை குணப்படுத்த அலோபதியே தோல்வியுற்ற நிலையில் ஆயுர்வேத மருத்துவ முறை சாதித்து இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. பராம்பரிய முறையான ஆயுர்வேதம் இன்னும் வருங்காலத்திலும் நிறைய வகைகளில் நோயாளிகளுக்கு உதவும் என நம்பலாம்.