நீண்ட ஓய்விற்கு பின்னர் மன்னாரில் தமது பிரச்சாரத்தை ஆரம்பித்த கேணல் ரத்ணபிரிய..!!

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் கேணல் ரத்ணபிரிய பந்து மன்னாரிற்கு வருகை தந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

வன்னியில் சிவில் பாதுகாப்பு படையின் கட்டளை அதிகாரியாக இருந்த கேணல் ரத்ணபிரிய பந்து, கடந்த ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து அவர் இராணுவத்தில் இருந்து விலகியிருந்தார். இவர் இடம் மாற்றம் செய்யப்படும் பொழுது வன்னி மக்கள் இவரை கண்ணீர் மல்க பிரியா விடை பெற்று அனுப்பியிருந்தனர்.இந்த நிலையில், கேணல் ரத்ணபிரிய பந்து சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.இவரது முதலாவது பிரச்சார கூட்டம் நேற்று மாலை 4 மணியளவில் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள தனியார் வாகன வாடகை நிலையத்தில் இடம் பெற்றது. இதன் போது மன்னாரில் சில கிராமங்களில் இருந்து மக்கள் கலந்து கொண்டனர்.இதன் போது மக்களின் பிரச்சினைகளை கேட்டு அறிந்து கொண்டதோடு,பாராளுமன்றம் செல்ல மன்னார் மக்கள் தனக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குமாறும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.