பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.!

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்குமாறும், வாக்குச் சாவடிகளில் கொரோனா வைரஸ் பரவாது எனவும் மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.அத்துடன் கொரோனா முடிந்து விட்டது என்று பழைய வாழ்க்கைக்கு செல்ல நினைக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கும் போது;

எதிர்வரும் தேர்தலின் போது, வாக்கெடுப்பு நிலையங்களில் கொரோனா பரவாது. அச்சமின்றி வாக்களியுங்கள் என்றே மக்களிடம் கூற வேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.எனினும், தேர்தல் சட்டங்களை பாதுகாக்குமாறு அரசியல்வாதிகள், வேட்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களிடம் கூறியுள்ளோம். நாட்டின் சட்டத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.இதனைத் தவிர மருத்துவர் அனில் ஜாசிங்கவின் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய செயற்படுங்கள் எனவும், கடந்த காலத்தை போல மக்களை கூட்டி ஊர்வலங்கள் போன்றவற்றை நடத்தி கோஷங்களை எழுப்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும், கூட்டங்களுக்கு மக்களை அழைத்து வந்து நிரப்ப வேண்டாம். மக்களின் இந்த ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் பொறுப்பு எம்மிடமே இருக்கின்றது என்பதை அரச அதிகாரிகளுக்கு கூற வேண்டும் எனவும் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.