விரைவில் காத்திருக்கும் பேரழிவு.!! மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் மாயன் கலண்டர்..!!

எதிர்வரும் 21ஆம் திகதியுடன் உலகம் அழியும் என்று மாயன் கலண்டரில் உள்ள செய்தி பரவலாக பேசப்படுகின்றது.மாயன் கலண்டர்படி வரும் 21ம் திகதிதான் உலகின் கடைசி நாள் என்று கூறியுள்ளது.


ஏற்கெனவே இதேபோன்ற செய்தி கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எழுந்தது. பின்னர் அது பொய்யானது.மெக்சிகோவை பூர்வீகமாகக் கொண்டதாகக் கூறப்படும் மாயன் இனத்தினர், முதல் மனித நாகரிக இனத்தினர் என்று கூறப்படுகிறது.ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாயன் இனத்தவர்கள் வானியல் சாஸ்திரம், ஜோதிடத்தில் மிகச்சிறந்து விளங்கினர். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே, கலண்டரைத் தயாரித்துப் பயன்படுத்தியுள்ளனர். இந்த கலண்டர் 5,126 ஆண்டுகளைக் கொண்டதாக இருந்தது.மாயன் இனத்தவர்கள் வாழ்ந்த காலத்தில் உருவாக்கிய நாட்காட்டி வரும் ஜூன் 21-ம் திகதியுடன் நிறைவடைவதால், அன்றைய தினம் உலகம் அழிந்துவிடும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.உலகம் முழுவதும் தற்போது கிரிகோரியன் கலண்டர் முறையைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். 1582-ம் ஆண்டுக்கு முன் இந்த கலண்டர் பரவலாகப் பயன்பாட்டுக்கு வரும் முன் உலகில் பல்வேறு வகையான கலண்டர்கள் காலத்தைக் குறிக்க மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதில் முக்கியமானது மாயன் கலண்டர், ஜூலியன் கலண்டர்.மாயன் காலண்டர் குறிப்பிட்டுள்ளபடி 2012இ டிசம்பர் 21-ம் திகதி கடைசி நாளாகும். ஜூலியன் காலண்டர் கோட்பாட்டின்படி கணக்கில் வரும் 21-ம் திகதிதான் மாயன் காலண்டர் குறிப்பிட்ட 2012, டிசம்பர் 21-ம் திகதியாகும்.இதனால் மாயன் கலண்டர் குறிப்பிட்டுள்ளபடி உலகின் கடைசி நாள் ஜூன் 21-ம் திகதியா என சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.ஏற்கெனவே இதுபோன்று கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தகவல் வெளியாகி அது பொய் என நிரூபிக்கப்பட்ட நிலையில் இப்போது அதே கோட்பாடு வலம் வரத் தொடங்கியுள்ளது.இதுகுறித்து நாசா விஞ்ஞானி ஒருவர் கூறுகையில்;ஏற்கெனவே இதபோன்று உலகம் அழியப்போகிறது என்று சுமேரியர்களால் முதன் முதலில் கூறப்பட்டது. அதன்பின் 2003-ம் ஆண்டு அழியும் என்றும், 2012-ம்ஆண்டு அழியும் என்று மாயன் கலண்டரைச் சுட்டிக்காட்டினார்கள். எதுவும் நடக்கவில்லை. இப்போது 2020-ம் ஆண்டைக் குறிப்பிடுகிறார்கள்.