பொதுமக்களுக்கு மிக முக்கிய தகவலை விடுத்துள்ள ஆட்பதிவுத் திணைக்களம்.!! 22ஆம் திகதி முதல் ஆரம்பம்.!

கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவையை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.திணைக்களத்திற்குள் ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் முதற்கட்டமாக நாளொன்றுக்கு 300தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பீ. வி குணதிலக்க தெரிவித்தார்.கொரோனா தொற்றை தவிர்க்கும் வகையான சுகாதார அறிவுறுத்தல்களை கருத்திற் கொண்டு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள பிரதான காரியாலயத்தின் ஊடாக 250அடையாள அட்டைகளையும் காலியிலுள்ள தென் மாகாண காரியாலயத்தின் ஊடாக 50அடையாள அட்டைகளுமே விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.வழமையாக விநியோகிக்கப்பட்டு வந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவை கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதுடன், சுமார் மூன்று மாத கால இடைவெளிக்கு பின்னர் பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.