இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணத்தின் முன்னாள் பிரதம செயலாளர் யாழில் திடீர் மறைவு..!!

வடக்கு – கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் சிவகுருநாதன் இரங்கராஜா தனது 71ஆவது வயதில் இன்று காலமானார்.

பொன்னாலையில் பிறந்த அவர் இலங்கை நிர்வாக சேவை அதிசிறப்புத் தரத்தில் மாகாண பிரதம செயலாளர் பதவியை வகித்தார்.இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணதின் பிரதம செயலாளராகவும் பின்னர் வடக்கு மாகாணத்தின் நிர்வாகம் தனியாகப் பிரிக்கப்பட்ட பின்னர் அதன் முதலாவது பிரதம செயலாளராகவும் சிவகுருநாதன் இரங்கராஜா பதவி வகித்தார்.மாகாண சபை நிர்வாகம் தொடர்பில் நன்கு அனுபவம் உடைய அவர், அனைத்துத் தரப்பினருடன் இணைந்து சேவையாற்றியிருந்தார்.அன்னாரின் பூதவுடல் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இறுதிக் கிரியைகள் நாளை மாலை 4 மணிக்கு இடம்பெறும் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.