பொலிஸ் நிலையத்தில் தற்கொலை செய்த பொலிஸ் கான்ஸ்டபிள்..!!

சிலாபம் – மாதம்பே பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 2 மணியளவில் பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.அவர் தற்கொலை செய்துக் கொண்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 26 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.