தொற்றுக்கு இலக்காகி குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா..!! இலங்கையில் மீண்டும் கொரோனா அபாயமா..?

அனுராதபுரம் – கெபத்திகொல்லேவ பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த பெண் ஒருவர் மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

குறித்த பெண் வீடு திரும்பிய பின்னர் மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாகியமையினால் அவரால் பிரதேசத்தில் கொரோனா பரவு வாய்ப்புகள் உள்ளதாக என சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்கவிடம் வினவப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர், குறித்த பெண்ணால் கொரோனா பரவ வாய்ப்புகள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும், இவ்வாறான நோயாளிகள் முழுமையாக கிருமி தொற்று நீக்கப்பட்டவர்களாகும். அவர்களிடம் இருந்து வேறு ஒருவருக்கு கொரோனா வைரைஸ் பரவாது.இந்த நோயாளிகளின் உடலினுள் உயிரிழந்த சுஆயு பகுதிகள் காரணமாகவே அவர்கள் மீண்டும் நோயாளிகளாகின்றனர். பொதுவாக நோயாளி ஒருவர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் இரண்டு முறை பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.இந்த பெண்ணுக்கும் அவ்வாறு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தவர்கள் அல்லது அருகில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை.இது தொடர்பில் மக்கள் அச்சம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.