விமானப் பயணிகளுக்கு ஒர் நற்செய்தி…பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஒரு பகுதி..!!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த முனையத்தை பயன்படுத்தி வெளிநாடு செல்லும் பயணி ஒருவர் விமான நிலையத்திற்கு செல்லும் போது தம்முடன் மூன்று பேரை அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு இந்த தகவலை தெரிவித்துள்ளது.எனினும் முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற சுகாதார அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள விமான சேவைகளை ஆகஸ்ட் மாதம் திறப்பதற்கு விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.